நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அருகே சொக்கத்தேவன்பட்டி நடுத்தெரு மகேந்திரன் 45. இவரது மகள் தனுஷ்யா 20. இவர் தனியார் கலைக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
வழக்கம் போல் ஏப்.28ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்ப வில்லை.
அதன்பின் எங்கு தேடியும் காணவில்லை. தந்தை புகாரில், தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

