/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
1330 திருக்குறள் ஒப்புவித்த மாணவருக்கு பாராட்டு
/
1330 திருக்குறள் ஒப்புவித்த மாணவருக்கு பாராட்டு
ADDED : டிச 14, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பாப்பா லட்சுமி முன்னிலையில் நடந்தது.
இப் போட்டியில் ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் ஹரி விஜய் 1330 திருக்குறள்களையும் முற்றோதல் செய்தார்.
மாணவரை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

