/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களை தாக்கிய மேலாளர் மீது புகார்
/
மாணவர்களை தாக்கிய மேலாளர் மீது புகார்
ADDED : அக் 30, 2025 04:33 AM
மூணாறு: மூணாறில் அரசு உண்டு, உறைவிட பள்ளியில் மூன்று மாணவர்களை மேலாளர் அனந்துகிருஷ்ணன் கம்பியால் தாக்கியதாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் பிரவீன், பிளஸ் 1 மாணவர்கள் விபுவ், அக் ஷய் ஆகியோரை பள்ளி மேலாளர் அனந்து கிருஷ்ணன் கம்பியால் தாக்கியதாக மாணவர்கள் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தனர். கம்பியால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களின் ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டது.
ஆனால் அச்சம்பவத்தை மறுத்த மேலாளர் தீபாவளி பண்டிகை அன்று மூன்று மாணவர்களும் பட்டாசு கொழுத்தி தன்னுடைய அறையில் வீசினர்.
அதனை கண்டித்ததால், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

