/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை மரங்கள் சேதம் எஸ்.பி.,யிடம் புகார்
/
வாழை மரங்கள் சேதம் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : அக் 07, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தர்மாபுரியில் முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகளுடன் தேனி எஸ்.பி., சினேஹா பிரியாவிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: 25 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்று மூர்த்திநாயக்கன்பட்டியில் வசிக்கிறேன். என்னுடைய நிலத்தின் அருகே உள்ள பெருமாள்சாமி என்பவரின் 87 சென்ட் நிலத்தை குத்தகைக்கு பெற்று செவ்வாழை பயிரிட்டிருந்தேன். தோட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் அக்.1ல், 51 வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தினர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.