தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/விவசாயி அடையாள அட்டை பதிவு பணிகளில் குழப்பம்

விவசாயி அடையாள அட்டை பதிவு பணிகளில் குழப்பம்

விவசாயி அடையாள அட்டை பதிவு பணிகளில் குழப்பம்


UPDATED : நவ 23, 2026 06:02 PM

ADDED : நவ 23, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:02 PM ADDED : நவ 23, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: விவசாயிகள் நிலம் தொடர்பான தகவல்களை பதிவு செய்து அடையாள அட்டையை பெறுவதில் குளறுபடிகள் இருப்பதாக வேளாண் துறையினர் புலம்பி வருகின்றனர்

வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகளும் கணிணி மயமாக்கப்பட்டு விட்டது. சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அடையாள எண் கொண்ட அட்டை வழங்க, பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணியில் வேளாண் துறையினர் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

ஒரு விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரித்து ஒத்தியோ, குத்தகைக்கோ கொடுத்திருந்தால் அடையாள எண் நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமே தர முடியும். உரக்கடைகளில் அந்த அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே உரம் வாங்க முடியும். இதில் குத்தகைக்கு வாங்கியுள்ளவர் சென்று கேட்டால் உரம் வழங்க மாட்டார்கள்.

இது இல்லாமல் சிட்டா, ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் இருக்க வேண்டும். பெயரில் எழுத்து மாறியிருந்தாலும் பதிய முடியாது. பெண்கள் திருமணத்திற்கு முன் தந்தை பெயர் இருக்கும். திருமணத்திற்கு பின் கணவர் பெயர் இருக்கும். இது போன்ற காரணங்களால் அடையாள அட்டை பதிவில் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது என்று வேளாண் துறையினர் புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us