ADDED : செப் 30, 2026 04:29 AM

அ நிறம் | அளவு
தேனி: தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்., கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி கோஷமிட்டனர். அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி, உருவ பொம்மையை பறித்து சென்றனர்.
இதனால் போலீசாருக்கும், காங்.,நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் சன்னசி, தேனி நகர தலைவர் சம்சுதீன், போடி நகர தலைவர் முஷாக் மந்திரி, நிர்வாகி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
