UPDATED : ஜூன் 27, 2026 09:27 PM
ADDED : ஜூன் 27, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் நகர வட்டார காங்., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சக்கம்பட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.
வட்டார தலைவர் ரவி தலைமை வகித்தார். நகர தலைவர் செல்வமணி, மாவட்ட துணை தலைவர் சுப்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் முபாரக், மாவட்ட செயலாளர் ரசூல், நகர செயலாளர் ராஜாராம், நகர துணைத் தலைவர் வேல்மணி, வழக்கறிஞர் மலைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
