
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தேனி காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.
வட்டாரத்தலைவர் முருகன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் சம்சுதீன், கவுன்சிலர்கள் நாகராஜ், சுப்புலட்சுமி, நிர்வாகிகள் சுதாகர், முகமதுமீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

