ADDED : ஆக 27, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
28–
மேகமலை, வருஷநாடு மக்களை வெளியேற்றும் முடிவை கண்டித்து தேனி பங்களாமேட்டில் காங்., எஸ்.சி., பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ரன்ஜன் குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன், மருத்துவ அணி மாநில நிர்வாகி ராஜ்குமார் பங்கேற்றனர். மேகமலை, வருஷநாடு மக்களை வெளியேற்ற கூடாது என்றும், வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி அவர்களது வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
