/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து காங்., தீர்மானம்
/
தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து காங்., தீர்மானம்
தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து காங்., தீர்மானம்
தி.மு.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து காங்., தீர்மானம்
ADDED : ஜன 31, 2026 05:58 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகர், வட்டார காங்., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் வட்டார தலைவர் ரவி தலைமையில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காங்., குறித்து தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வரும் சட்டசபை தேர்தலில் காங்., கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர் செயலாளர் ராஜாராம், துணைத் தலைவர் வேல்மணி, வட்டார செயலாளர் வேல்முருகன், வழக்கறிஞர்கள் தாமோதரன், மலைமுருகன், நிர்வாகி பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.