/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டுமானம்: மீண்டும் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டுமானம்: மீண்டும் அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டுமானம்: மீண்டும் அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டுமானம்: மீண்டும் அகற்றம்
ADDED : டிச 07, 2024 08:13 AM
மூணாறு: மூணாறில் எம்.ஜி., நகரில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை வருவாய்அதிகாரிகள் அகற்றினர்.
அப்பகுதியில் அரசு ஹோமியோ மருத்துவமனை அருகே பால் என்பவர் கட்டடம் கட்டி வந்தார். அப்பணிகள் விதிமுறைகள் மீறி நடப்பதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், சிறப்பு தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் வருவாய்துறை ஊழியர்கள், நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நவ.21ல் கட்டடத்தை அகற்றினர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுமானம் நடந்தது. அதனை சிறப்பு வருவாய்துறை அலுவலக டெபுடி தாசில்தார் அஜீஸ் தலைமையில் ஊழியர்கள், நிலம் பாதுகாப்பு படையின் உதவியுடன் நேற்று அகற்றினர்.