UPDATED : ஆக 26, 2026 09:03 PM
ADDED : ஆக 26, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி கமிஷனர் பார்கவி தலைமையில் என்.ஆர்.டி. நகர், அதனை சுற்றிய உள்ள பகுதிகளில் சாக்கடைகள் துார்வரும் பணிகள் நடந்து வருகிறது.
பணிகளை நகராட்சி எஸ்.ஐ., அலெக்ஸ்பாண்டியன் , பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செப்., இறுதிக்குள் சாக்கடை துார்வாரும் பணிகள் முடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
