ADDED : செப் 20, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.21–
தேனியில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நலவாரியத்தில் பதிவு செய்த கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் பிச்சைமணி, மாநில பொதுச் செயலாளர் குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
