நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கோத்தலுாத்து சமுதாய கூட கட்டடத்தில் நடந்தது. கூட்டத்தில் அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் மார்க்கண்டன் தலைமை வகித்தார்
மூத்த உறுப்பினர் கதிரேசன் முன்னிலை வகித்தார். ஆகஸ்ட் 8ல் திருச்சியில் நடக்க உள்ள மாநாட்டை விளக்கி மாவட்ட தலைவர் பாலமுருகன் பேசினார். நிர்வாகிகள் திருப்பதி வெங்கடேசன், லட்சுமி பார்வதி, ஜோதிபாசு, ஜீவானந்தம், வேல்முருகன், விஜயன், கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.