/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறித்து ஆலோசனை
/
ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறித்து ஆலோசனை
ADDED : ஜன 04, 2026 06:00 AM
ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து எம்.எல்.ஏ., மகாராஜன் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன.
இங்கு அடிப்படை வசதிகளை பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓக்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஆலோசனையில் ஊராட்சி செயலாளர்கள் செய்து வருகின்றனர். சில ஊராட்சிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சரவணன், ஐயப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
குடிநீர் வசதி, தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது.

