கூடுதல் உரங்கள் வாங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்
கூடுதல் உரங்கள் வாங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்
UPDATED : ஆக 12, 2026 05:27 PM
ADDED : ஆக 12, 2026 05:23 PM
தேனி:விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தேவையான உரங்கள் மட்டும் வாங்கவேண்டும். கூடுதல் உரங்களை வாங்கி சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர் அறிவுறுத்தி உள்ளார்.
மாவட்டத்தில் 77 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 227 தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல்போக சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சில பகுதிகளில் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை துவங்கி உள்ளனர். மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளது.
தேவையின்றி கூடுதலாக உரங்கள் வாங்கி சேமித்து வைப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் யூரியா 1617 டன், டி.ஏ.பி., 645 டன், பொட்டாஷ் 822 டன், காம்ப்ளக்ஸ் 3779 டன் கையிருப்பில் உள்ளது. உரம் வாங்கும் போது விவசாயிகள் ரசீது கேட்டு வாங்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
