ADDED : அக் 23, 2024 05:48 AM

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் மழையால் விவாசய பணிகள் விறுவிறுப்படைதந்துள்ளது.
பெரியகுளம் தாலுகா பகுதியில் பத்து நாட்களுக்கும் மேலாக மழை தொடர்வதால் விவசாயப்பணிகளை ஆர்வமாக துவக்கியுள்ளனர்.
சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்ய மாட்டு உழவு, டிராக்டர் உழவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டிராக்டர் உழவு பணி செய்யும் கண்ணாயிரம் கூறுகையில்: வடகிழக்கு பருவமழையால் உழவு பணி அதிகரித்துள்ளது. நெல்லுக்கு நாற்றங்கால் நடவு, விதைப்பு உட்பட அனைத்து விவசாயப் பணிகள் நடக்கும்.
டிராக்டர் உழவுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.900 வாங்குகிறோம். காலை முதல் மாலை வரை 10 இடங்களில் உழவு செய்வேன். நிலத்தை ஆழமாக உழும் போது பயிர் நன்கு வளர உதவும்.
நல்ல உழவுக்காரருக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். தினமும் செலவு எல்லாம் போக ரூ. 5 ஆயிரம் கிடைக்கும்.
பத்து முதல் 15 நாட்கள் வரை தீபாவளியை தவிர வேலை இருக்கும். இந்த காலத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கிடைக்கும் என்றார்.
