ADDED : பிப் 23, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டம் ஓடைபட்டி சிவகண்ணன், காய்கறி வியாபாரி. தேனியில் வாரசந்தையில் கடை வைத்திருந்தார். அங்கு வந்த 17 வயது சிறுவன் ரூ.500 நோட்டுகளை வழங்கி காய்கறிகள் வாங்கி சென்றான். அருகில் இருந்த கடைகளிலும் அதே போல் ரூ.500 நோட்டுகளை வழங்கி பொருட்கள் வாங்கி சென்றான். சிறிது நேரம் கழித்து சிறுவன் வழங்கியது கள்ள நோட்டுகள் என தெரிந்தது.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கடைகாரர்கள் புகார் தெரிவித்து, சிறுவனை தேடி வந்தனர். தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற சிறுவனை பிடித்தனர். அவரிடமிருந்து ஒரே சீரியல் எண் கொண்ட கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். சிறுவன், கள்ளநோட்டுகளை தேனி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ்.ஓ.ஆர்., நகரைச் சேர்ந்த சிறுவன் என தெரிந்தது. சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

