ADDED : ஆக 29, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான லெட்சுமி எஸ்டேட், வெஸ்ட் டிவிஷனை சேர்ந்தவர் தோட்டத் தொழிலாளி ரமேஷ்.
இவருக்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாத நிலையில், வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட பகுதியில் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்ததை நேற்று பார்த்தனர். தினமும் 15 லிட்டர் பால் வழங்கும் கறவை பசுவை புலி தாக்கி கொன்றதாக தெரிய வந்தது.
