UPDATED : நவ 15, 2026 05:44 PM
ADDED : நவ 15, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட், மானிலை டிவிஷனை சேர்ந்தவர் ராஜா.
தொழிலாளி. இவருக்கு சொந்தமான பசு மேய்ச்சலுக்கு சென்றது. வீடு திரும்ப வில்லை. அதனை தேடிய போது தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் இறந்து கிடந்தது. அதன் உடல் பாதி தின்ற நிலையில் காணப்பட்டது. பின் புலி தாக்கி கொன்றது தெரிந்தது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வனத்துறையினர் இதனை உறுதி செய்தனர். மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இந்தாண்டு இதுவரை 38 பசுக்கள் புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. 17 பசுக்கள் பலத்த காயத்துடன் உயிர் தப்பி உள்ளன.
