/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர் விளைச்சல் போட்டி வேளாண்துறை ஆய்வு
/
பயிர் விளைச்சல் போட்டி வேளாண்துறை ஆய்வு
ADDED : நவ 04, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:  தமிழக அளவில் ஒவ்வொரு பயிர் சாகுபடியிலும் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் பயிர் சாகுபடி போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று கம்பம் வட்டாரத்திற்கு மேலக்கூடலுாரில் விவசாயி ஒருவர் நிலக்கடலை சாகுபடியில் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தார்.
அவரது வயலில் நேற்று அறுவடை நடந்தது. அதனை கலெக்டர் நேர்முக உதவியாளர்(வேளாண்) வளர்மதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேளாண் உதவி இயக்குநர் நாகேந்திரன், தேனி தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர் ஆய்வு செய்தனர்.

