ADDED : ஜன 19, 2026 05:44 AM
தேனி: மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட வந்தவர்கள் , விடுமுறை முடிந்து திரும்பினர். இதனால் தேனி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த புதன் முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெளியூர்களில் பணிபுரியும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வந்திருந்தனர்.
நேற்றுடன் விடுமுறை முடிந்ததால், பணிபுரியும் ஊர்களுக்கு செல்ல தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை, சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிலர் பஸ்களில் இடம் கிடைக்காமல் தவிப்பிற்கு உள்ளாகினர்.
அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சிலர் இருக்கைகள் கிடைக்காததால் நின்றவாறு பயணம் செய்தனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். போடியில் இருந்து தேனி வழியாக இயக்கப்பட்ட ரயில்களிலும் ஏராளமானோர் பயணித்தனர்.
