ADDED : அக் 18, 2025 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள், பட்டாசு வாங்குவதற்காக தேனியில் மக்கள் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேனியில் மதுரை ரோடு பகவதியம்மன் கோயில் தெரு, எடமால் தெரு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்தது.
தற்காலி கடை நடத்துவோர் தெருக்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்ததால் மக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மதுரை ரோடு, பெரியகுளம், கம்பம் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நெரிசல் அதிகரித்தது. கூட்டம் அதிகரித்து இருந்தால் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தினர்.