UPDATED : நவ 19, 2026 06:03 PM
ADDED : நவ 19, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறுக்கு மனைவியுடன் சுற்றுலா வந்த சி. ஆர்.பி.எப். வீரர் அறையில் மயங்கி விழுந்து இறந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப். வீரர் பாலுதிலீப்ரோமன் 32. இவர், மனைவி மற்றும் சக வீரரின் குடும்பத்தினருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் காலனி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு அறையில் வைத்து பாலுதிலீப்ரோமன் திடிரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
