/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள், மண்டல இயக்குநர் சந்திப்பு
/
கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள், மண்டல இயக்குநர் சந்திப்பு
கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள், மண்டல இயக்குநர் சந்திப்பு
கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள், மண்டல இயக்குநர் சந்திப்பு
ADDED : நவ 02, 2025 06:06 AM
கம்பம்: கம்பம் நகராட்சி கவுன்சிலர்களை, நகராட்சிகளின் மதுரை மண்டல இயக்குநர் முருகேசன் சந்தித்து பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
கம்பம் நகராட்சி தலைவராக வனிதா (தி.மு.க.) துணை தலைவராக சுனோதா (தி.மு.க.) உள்ளனர். மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 16 தி.மு.க., 3 அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் தலைவர்,துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆனால் 5 ல் 4 பங்கு 27 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் என்ற நிலையில், 19 கவுன்சிலர்கள் இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்த தலைவர், துணை தலைவர், தங்களது ஆதரவு கவுன்சிலர்களுடன் கடந்த வாரம் உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்களும் அமைச்சர் நேருவை சந்தித்து தங்களின் குமுறல்களை கொட்டி தீர்த்தனர். மதுரை மண்டல இயக்குநர் முருகேசனை அழைத்த அமைச்சர் நேரு,கம்பம் சென்று நகராட்சியில் என்ன தான் நடக்கிறது என்று ஆய்வு செய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முன் கம்பம் வந்த மண்டல இயக்குநர் முருகேசன், முதலில் எதிர் அணி கவுன்சிலர்களை அழைத்து இரண்டறை மணி நேரம் பேசினார். பின்னர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின் தலைவர் ஆதரவு கவுன்சிலர்களிடமும் பேசி, அவர்களிடமும் மனுக்களை பெற்றார்.
சில மாதங்களாக தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள், இதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், அந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், இரண்டு அணிகளும் அமைச்சரை பார்த்தது, அமைச்சர் மண்டல இயக்குநரை அனுப்பி விசாரித்ததுள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் கம்பம் நகராட்சியில் இனியாவது பிரச்னையில்லாமல் நிர்வாகம் சுமூகமாக செயல்பட வேண்டும் என்றனர்.

