ADDED : ஆக 27, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆன்லைன் முதலீடு, கல்வி உதவித்தொகை, ஆன்லைன் பரிசு கூப்பன், டிஜிட்டல் தங்கம் உள்ளிட்ட பலவகை மோசடிகள் நடந்துள்ளன.
மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின. இவ்வழக்குகளில் சராசரியாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் விசாரிக்கின்றனர்.
