தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணைநீர் நிறுத்தம்

வைகை அணைநீர் நிறுத்தம்

வைகை அணைநீர் நிறுத்தம்


ADDED : பிப் 17, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதிக்கு குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.

அணையில் இருந்து பிப்ரவரி 6 முதல் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் 10 நாட்களுக்குப் பின் நேற்று நிறுத்தப்பட்டது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 63.25 அடியாக இருந்தது.

அணையின் மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் நீர் வெளியேறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us