ADDED : ஜன 09, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
தேவாரம்: சின்னமனூர் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம். இங்கு 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 15 ஆண்டுகளுக்கு முன் எம்.பி., தொகுதி மேம்பாடு நிதியில் ரூ. 5 லட்சத்தில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. தற்போது, பராமரிப்பு இன்றி சமுதாய கூடத்தின் உட்பகுதியில் கட்டடம் விரிசல் ஏற்பட்டு, மின்விசிறி சேதமடைந்த நிலையில் உள்ளன.
பயன்பாடின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மது அருந்தவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக சிலர் பயன்படுத்து கின்றனர். சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சின்னமனுார் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
