/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த தொட்டி வீணாகும் தண்ணீர்
/
சேதமடைந்த தொட்டி வீணாகும் தண்ணீர்
ADDED : டிச 12, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் காந்தி கிராமத்தில் ஆழ் துளை கிணறு மூலம் தண்ணீர் பம்பிங் செய்து தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அதிகமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டி பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
தண்ணீர் நிரப்பிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. மேலும் மக்கள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் தொட்டியில் இருந்து தண்ணீர் வடிந்து விழுவதால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக அப்பகுதியில் புதிய தொட்டி அமைத்து வீணாகும் தண்ணீரை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

