UPDATED : நவ 19, 2026 07:40 PM
ADDED : நவ 19, 2026 07:40 PM
அ நிறம் | அளவு
தேனி: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாம்கோ) சார்பில் சிறுபான்மையினர் தொழில் முனைவோராக மாற கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். டாம்கோ சார்பில் பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நவ.,24ல், தேனி நவ., 25, போடி, உத்தமபாளையம் நவ., 26ல் காலை 10:30 மணி முதல் சிறப்பு முகாம் நடக்கிறது. கடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தள்ளார்.
