/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அபாயம்
/
அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அபாயம்
ADDED : மார் 06, 2026 06:11 AM

தேனி: அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் ரோட்டில் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக ஏற்றி செல்லுவது, அதிக உயரத்திற்கு பொருட்கள் அடுக்கி எடுத்து செல்வது அதிகரித்துள்ளது. அதிக எடை ஏற்றி செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. சிலர் எடை குறைவான பொருட்களை எடுத்து செல்லும் போது அதிக உயரத்திற்கு அடுக்கி செல்கின்றனர். இதனால் அந்த வாகனங்களுக்கு அருகில் செல்ல மற்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனகள் வளைவுகளில் திரும்பும் போது வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது. அதிக பாரம், கூடுதல் உயரத்திற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்துதுறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

