ADDED : பிப் 20, 2026 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப், கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு பகுதிகளிலும் ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன. திராட்சை, இளநீர் உள்ளிட்ட வியாபாரம் அதிகம் உள்ளது. வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி நீண்ட நேரம் மக்கள் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் நிற்கின்றனர்.
டூவீலர்கள் செல்லும் பாதை ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் விபத்தில் சிக்கி வருகின்றன. தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை துறை போலீசார் முன்வர வேண்டும். மேலும் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

