தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொழிலாளர்கள் ஆபத்தான பயணம்

 தொழிலாளர்கள் ஆபத்தான பயணம்

 தொழிலாளர்கள் ஆபத்தான பயணம்


ADDED : செப் 27, 2026 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 02:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விவசாய வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தினமும் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் பல கிராமங்கள் விவசாயம் சார்ந்துள்ளது. வைகை ஆற்றின் கரையோரங்கள் வைகை அணை சார்ந்துள்ள கிராமங்களில் ஆண்டு முழுவதும் விவசாய பணி நடைபெறுகிறது.

வறட்சியான காலங்களில் விவசாய வேலைகள் கிடைக்காத தொழிலாளர்கள் தொலைதூரத்தில் உள்ள நிலங்களில் அன்றாடம் வேலைக்கு சென்று திரும்புகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு சென்று திரும்புவதற்கு பெரும்பாலான இடங்களில் பஸ் வசதி இல்லை. அந்தந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குழுக்களாக சேர்ந்து ஆட்டோக்களை வாடகைக்கு பிடித்து பயணிக்கின்றனர். தூரத்திற்கு ஏற்ப ஒரு நபருக்கு ஆட்டோக்களில் ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டணம் நிர்ணயித்து கொண்டு சேர்க்கின்றனர்.

ஒரு ஆட்டோவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் தினமும் தொடரும் இந்த ஆபத்தான பயணம் குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை. ஆட்டோக்களில் ஆபத்தான பயணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொழிலாளர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வலர்கள், போலீசார் முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us