ADDED : அக் 30, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: அனுமத்தன்பட்டி கோனார் தெரு சொக்கர் மகள் முத்துமாரி 29. இவரை காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்த ராஜா 32 என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்து கொடுத்துள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் கோபித்துக் கொண்டு 2 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இருதரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் பஞ்சாயத்து பேசினர்.
சிறிது நேரத்தில் வெளியே போய்விட்டு வருவதாக கூறிச் சென்ற முத்துமாரி வீடு திரும்பாததால் மகளை கண்டுபிடித்து தருமாறு தந்தை புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

