தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அதிக மாத்திரைகளை சாப்பிட்டவர் இறப்பு

அதிக மாத்திரைகளை சாப்பிட்டவர் இறப்பு

அதிக மாத்திரைகளை சாப்பிட்டவர் இறப்பு


UPDATED : ஆக 31, 2026 07:12 PM

ADDED : ஆக 31, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:12 PM ADDED : ஆக 31, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் 56, தனது மனைவி பாப்பாத்தியுடன் சேர்ந்து ஆண்டிபட்டி வைகை ரோட்டில் பி.எஸ்.என்.எல்.,அலுவலகம் அருகே கரும்பு ஜூஸ் கடை வந்தார். மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் வாகன விபத்து ஏற்பட்டதில் பாண்டியராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் மன அழுத்த பாதிப்பும் இருந்துள்ளது. அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 24 ல் மதியம் வீட்டின் மாடியில் பாண்டியராஜ் தூங்க சென்றுள்ளார். மாலையில் மகன் சென்று பார்த்த போது மயக்க நிலையில் இருந்துள்ளார். அவர் அருகில் அதிக மாத்திரை அட்டைகள் இருந்துள்ளது. அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல் நல பாதிப்பு அதிகமானதால் பாண்டிராஜ் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் சிகிச்சை பலன் இன்றி இறந்தது தெரிய வந்துள்ளது. ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us