ADDED : நவ 02, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர் சக்திவேல் 37. துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் கோயிலுக்கு செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த கோபிநாதன் 24. முத்துக்கருப்பன் 21. இருவரும் மது பிரச்னை காரணமாக சக்திவேலுவை தகாத வார்த்தையால் பேசி கன்னத்தில் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். போடி டவுன் போலீசார் கோபிநாதன், முத்துகருப்பன் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

