/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற முடிவு
/
வாக்காளர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற முடிவு
ADDED : அக் 16, 2025 04:59 AM
தேனி: வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் பி.எல்.ஓ.க்கள் வீடு,வீடாக சென்று ஆய்வு செய்து ஒப்புதல் கடிதம் பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. விரைவில் வாக்காளர்பட்டியில் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் போது பி.எல்.ஓ.,க்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் உள்ள வாக்காளர் விபரங்களை சேகரிக்க உள்ளனர். அப்போது வீட்டில் உள்ளவர்களில் 2002ல் வெளியான வாக்காளர்பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் எவ்வித ஆவணங்கள் வழங்க தேவையில்லை. இந்த பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உறுதி செய்த பின் வாக்காளர் விபரங்களை பி.எல்.ஓ.,க்கள் ஒரு கடிதத்தில் குறிப்பெடுத்து கொள்ள உள்ளனர். அதன் நகலை வீட்டில் உள்ளவர்களிடம் கையொப்பம் பெற்று வழங்க உள்ளனர். இதற்காக தமிழில் ஒப்புதல் கடிதங்கள் தயாராகி வருதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.