/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் குழந்தைகள் பிறப்பு சரிவு
/
தேனி நகராட்சியில் குழந்தைகள் பிறப்பு சரிவு
ADDED : அக் 02, 2025 03:13 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்தாண்டை விட இந்தாண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இந்நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 அரசு மருத்துவமனைகள், 40 தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆண் குழந்தைகள் 608, பெண் குழந்தைகள் 592 பேர் என 1200 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 2024 ஜனவரி முதல் ஆக., வரை 784 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஆண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிந்துள்ளது. இந்தாண்டு கடந்த 8 மாதங்களில் 609 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த எட்டு மாதங்களை ஒப்பிடுகையில் குழந்தைகள் பிறப்பு குறைந்து காணப்படுகிறது.
இது தவிர கடந்தாண்டு முதல் 8 மாதங்களில் 381 பேர் இறந்துள்ளனர்.
இந்தாண்டு முதல் 8 மாதங்களில் 326 பேர் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.