UPDATED : அக் 07, 2026 04:50 PM
ADDED : அக் 07, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
தேனி: தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்.,வரை நீடிக்கும்.
இந்த பருவமழையால் நேரடியாக தேனி, கோவை, தென்காசி உள்ளிட்ட ஒரு சில தமிழக மாவட்டங்கள் மட்டும் பயனடையும். தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 170.8 மி.மீ., பதிவாக வேண்டும். சராசரி மழை அளவை விட கூடுதலாக மாவட்டத்தில் மழை பதிவாகிறது. கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையில் 3384.4 மி.மீ., சராசரியாக 260.34 மி.மீ., பதிவானது. இந்தாண்டு 3077.4 மி.மீ., சராசரியாக 236.72 மி.மீ., மழை பதிவானது. கடந்தாண்டை விட தென்மேற்கு பருவமழை குறைவாக பதிவாகி உள்ளது.
