sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ரேஷன் முன் நகர்வு தாமதத்தால் பிப்.,ல் வினியோகம் பாதிக்கும் சூழல்

/

 ரேஷன் முன் நகர்வு தாமதத்தால் பிப்.,ல் வினியோகம் பாதிக்கும் சூழல்

 ரேஷன் முன் நகர்வு தாமதத்தால் பிப்.,ல் வினியோகம் பாதிக்கும் சூழல்

 ரேஷன் முன் நகர்வு தாமதத்தால் பிப்.,ல் வினியோகம் பாதிக்கும் சூழல்


ADDED : ஜன 31, 2026 05:59 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் ஒருவாரம் தாமதமாக பிப்ரவரிக்கான ரேஷன் பொருட்கள் முன்நகர்வு துவங்கி உள்ளது. இதனால் அடுத்த மாதத்தில் ரேஷன் வினியோகம் முதல் வாரத்தில் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள், அதற்கு முந்தைய மாதம் 20,21 தேதிகளில் முன்நகர்வு செய்யப்படும். ஆனால் ஜனவரிக்கான ரேஷன் பொருட்கள் முழுமையாக முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம், நுகர்பொருள் வாணிப கழக லோடு மேன்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களாக கூறப்பட்டன. அதனால் ரேஷன்கடைகளுக்கு ஜன.,ல் வழங்க வேண்டிய பொருட்கள் கடந்த சிலநாட்களாக அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் பிப்.,க்கான முன்நகர்வு நேற்று முன்தினம் துவங்கியது.

அதாவது, ஒரு வாரம் தாமதமாக முன்நகர்வு பணிகள் துவங்கி உள்ளது. இதனால் பிப்., முதல் வாரத்தில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கும் பணி சில இடங்களில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், 'கடைகளில் சுமார் 15 சதவீத பொருட்கள் இருப்பு உள்ளன. இவற்றை வைத்து வினியோகம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் வழங்கும் பணியை 2வது வாரத்தில் மேற்கொள்ள ஆலோசித்துள்ளோம். 2வது வாரத்தில் இருந்து பொருட்கள் வினியோகம் இயல்பு நிலையாகும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us