/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடகிழக்கு பருவமழை குறைவு: அணைகளில் நீர் திறப்பு தாமதம்
/
வடகிழக்கு பருவமழை குறைவு: அணைகளில் நீர் திறப்பு தாமதம்
வடகிழக்கு பருவமழை குறைவு: அணைகளில் நீர் திறப்பு தாமதம்
வடகிழக்கு பருவமழை குறைவு: அணைகளில் நீர் திறப்பு தாமதம்
ADDED : நவ 19, 2025 06:32 AM

தேவதானப்பட்டி: வடகிழக்கு பருவமழை குறைவால் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. அணைக்கு தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் இருந்து நீர்வரத்து இருக்கும். அணையின் மொத்த உயரம் 57 அடி. 55 அடி மட்டுமே நீர் தேக்க முடியும்.
இந்த அணை நீரால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன பயன் பெறும். கடந்தாண்டு ஜூன் 20ல் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது.
அக்.15ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைவினால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் இந்தாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதில் தாமதமாகிறது. அணை பகுதியில் 2 மி.மீ., மழை மட்டும் பெய்ததால் நீர்வரத்து இல்லை. நேற்று அணை நீர்மட்டம் 45 அடி. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர்.
சோத்துப்பாறை அணை: பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. அணை நீரினால் பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பியம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். இதன் மூலம் ப ழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு என 2865 ஏக்கர் பாசன பயன் பெறும்.
கடந்த தீபாவளியன்று (அக்.20ல்) அணையில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அடுத்தடுத்த நாட்களில் மழை இல்லாததால் தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது அணையின் உயரம் 126. 28 அடி உள்ளது.
அணைக்கு வரும் நீர் 25 கன அடி அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் இரு அணைகளிலும் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு தாமதமாகிறது. -

