/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை ஒழிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
போதை ஒழிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், இவற்றை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து ஆண்டிபட்டியில் ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். நகர் பொறுப்பாளர் ராஜேஷ்குமார், கிருடா பாரதி ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், தேனி நகர் செயலாளர் ராம்கண்ணன் உட்பட பலர் பேசினர். ஹிந்து இளைஞர் முன்னணி ஒன்றிய நகர நிர்வாகிகள், பா.ஜ., மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

