ADDED : பிப் 29, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு என மின்வாரியத்தில் உழைக்கும் ஊழியர்களிடம் பிரிவினை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோாரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட திட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் மூக்கையா முன்னிலை வகித்தார். திட்டப் பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

