ADDED : டிச 04, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் புரட்சி தமிழர் கட்சி சார்பில் கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி காலனியில் வசிக்கும் அருந்ததிய சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

