ADDED : பிப் 12, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பங்களாமேட்டில் மாவட்ட அனைத்து வண்ணார் முன்னேற்ற நல சங்கம் சார்பில் வண்ணார் சமூகத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திடக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் பிரகாஷ், செல்வம், விக்ரம், இசக்கிமுத்து, மாதேஷ், பெருமாள், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
