ADDED : பிப் 27, 2024 06:48 AM

அ நிறம் | அளவு
தேனி, : தேனி பெருந்திட்ட வளாகம் பள்ளிகல்வி சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வீரேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சம ஊதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
