நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், 'பதவி உயர்வு பெறும் ஊழிர்களை சொந்த மாவட்டத்திலேயே மண்டல ஒதுக்கீடு செய்யவும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி,'ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் விஸ்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மாரிச்சாமி, மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேயத்தேவன், மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் இன்று (மார்ச் 8) மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

