நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டக்கிளை தலைவர் சடையாண்டி தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

