ADDED : பிப் 10, 2026 06:24 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபால்நாயக்கன்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கூட்டுறவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடகு வைத்த நகை, டெபாசிட் பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தினர். கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், அம்சமணி, கண்ணன், தர்மர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
