UPDATED : ஜூன் 21, 2026 06:31 PM
ADDED : ஜூன் 21, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
தேனி:திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கோரி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்மிக அணி மாநில செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் குரு அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். ஹிந்துக்களை அவதுாறாக பேசிய அமைச்சர்கள் வன்னி அரசு, நிர்மல்குமாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் கருப்பையா, கார்த்திக், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
